News

வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்.

வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்.


நீண்டகாலமாகவே வேர்ட்பிரஸ் பலராலும் தமிழாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரு தொடர்ச்சித்தன்மை இல்லாத காரணத்தினாலும் முதலில் செய்பவர்கள் பின்னர் ஆர்வம் குன்றி நிறுத்தி விடுவதனாலும் சிலகாலமாக தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெளிவரவில்லை. அத்தோடு வேர்ட்பிரஸின் தமிழ் தளங்களும் செயலிழந்து விட்டன.

ஒரு நீண்டகால வேர்ட்பிரஸ் பயனாளர் என்ற வகையில் எனது ஓய்வு நேரங்களில் வேர்ட்பிரஸ் மற்றும் அதனோடு இணைந்த சேவைகளை தமிழ்ப்படுத்துவது என்ற முயற்சியை ஆரம்பித்திருக்கின்றேன். இது ஒரு தனிப்பட்ட முயற்சியாய் அல்லாமல் ஒரு கூட்டு முயற்சியாய் அமைய வேண்டும் என்ற பேரவா என்னுள்ளே எப்போதும் போல இருக்கின்றது. உங்களால் முடிந்தளவு https://translate.wordpress.org/ தளத்திற்கு சென்று தமிழ்(இலங்கை) என்பதனை மொழிமாற்றம் செய்து உதவுங்கள். என்னால் முடிந்தளவு வேகமாக உங்கள் மொழிமாற்றங்களை சரிபார்த்து, அங்கீகரித்து தமிழ்ப்பதிப்புகளை சரியான நேரத்தில் வெளியிட முனைவேன்.

உங்களிடம் ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
ஊரோடி பகீ

“வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்.” இற்கு 6 மறுமொழிகள்

  1. I cannot understand that Tamil(Srilanka). Why It should not be Tamil? When we all feel that we are only Tamils not Srilankan Tamils / Indian Tamils?
    What about the Tamils born in other countries?

    Please try to change that “Tamil(Srilanka)” to “Tamil”.

  2. கார்த்தி,

    நல்லதொரு கேள்வி. உண்மை என்னவென்றால் இரண்டாயிரத்து எட்டு ஆரம்பத்தில் இது நிகழ்ந்ததென நினைக்கின்றேன். தமிழுக்கு மொழி மாற்றப் பட்ட பல மென்பொருள்களை மொழிமாற்றியவர்கள் (தமிழ்நாட்டார்) தொடர்ச்சியாக பல ஆங்கில மொழிச் சொற்களை கலந்து பயன்படுத்தியமையால் இலங்கையிலிருந்து தமிழ் மொழிமாற்றம் செய்தவர்கள் தமிழ் (இலங்கை) என தனியாக மொழிமா��்றத்தை ஆரம்பித்தார்கள். (இவ்வழக்கு பல மொழிகளிலும் உண்டு. போர்த்துக்கல், போர்த்துக்கல் (பிரேசில்) என்பது போல)

    வேர்ட்பிரஸிலும் தமிழ் மற்றும் தமிழ்(இலங்கை) என இரண்டு மொழிமாற்ற வசதிகள் உள்ளன. தமிழ்(இலங்கை) இனை நான் பொறுப்பெடுத்து மொழிமாற்றம் செய்கின்றேன். தமிழை மொழிமாற்றம் செய்வார் யாரும் இல்லை. யாராவது பொறுப்பெடுப்பின் அதுவும் கிடைக்கக்கூடியதாயிருக்கும்.

    தமிழ்நாட்டார் ஆங்கில சொற்களின் பிரயோகத்தை அதிகளவு குறைக்கும் வரையில் தமிழ்(இலங்கை) மற்றும் தமிழ் என இரு பதிப்புக்கள் வந்துகொண்டே இருக்கும்.

  3. HOW TO TRANSLATE? You have given a good sugession.

  4. I DON’T KNOW HOW TO TYPE IN TAMIL IN THIS COLUMN. CAN YOU GUIDE ME?WEATHER AZHAGI FONT WORK IN THIS PAGE?

  5. நீங்கள் யுனிக்கோட் இனை பயன்படுத்த வேண்டும். eKallapai, NHM Writer போன்றன இதற்கு பயன்படும்.

  6. we all will help to translate the wordpress
    in TAMIL….. Thats our pleasure….

மறுமொழியொன்றை இடுங்கள்